உள்ளூர் செய்திகள்

இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல். 

நாட்டின் ஏற்றுமதி 55 சதவீதம் உயர்வு பியோ தலைவர் பெருமிதம்

Published On 2023-04-15 11:05 GMT   |   Update On 2023-04-15 11:05 GMT
  • 2022-23ம் நிதியாண்டில் 63.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
  • ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக பொருளாதார மந்தநிலை நிலவியது.

திருப்பூர் :

இந்த நிதியாண்டில் நம் நாட்டின் ஏற்றுமதி 55 சதவீ தம் உயர்ந்துள்ளது என்று இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு(பியோ) தலைவர் சக்திவேல் கூறியுள்ளார். இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக அளவிலான பொருளா தார மந்த நிலையையும் மீறி, இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2022-23ம் நிதியா ண்டில் 63.14 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 21-22ல் 41 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை நிலவியது.கடந்த ஆண்டிலிருந்து ஏற்பட்ட பாதிப்பு முழுமையாக தீரவில்லை. தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் போர் சூழல் குறைந்தபாடில்லை. கடந்த, 2021-22ம் நிதி ஆண்டை காட்டிலும் 22-23ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வர்த்தகம், 55 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. வரும், 2030ல் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 164 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.

ஆட்டோமொபைல், இயந்திர ஏற்றுமதி என பல்வேறு துறைகளிலும் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் மேம்பட தமிழ்நாடு ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிப்பது வங்கி கணக்கு செயல்பாடு அவகாசம் 90 நாட்கள் என்பதை 180 நாட்களாக உயர்த்தி கொடுப்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News