உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கப்பட்ட காட்சி .

உலக மகளிர் தின விழாவையொட்டி இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு விருது

Published On 2023-03-07 05:44 GMT   |   Update On 2023-03-07 05:44 GMT
  • 4-வது ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
  • விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 சாதனை பெண்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் ஆண்டுதோறும் உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கவுரவித்து, அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார். அதன்படி 4-வது ஆண்டு விருது வழங்கும் விழா மகா திறன் மங்கை என்ற தலைப்பில் திருப்பூர் ராயபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

அறக்கட்டளை நிறுவனத்தலைவர் இந்திரா சுந்தரம் தலைமை தாங்கினார். மாநகர தெற்கு போலீஸ் துணை கமிஷனர் வனிதா, அவினாசி கோட்டக்கலால் அலுவலர் ராகவி, பல்லடம் அரசு கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை விருந்தினர்களாகவும், கிட்ஸ் கிளப் கல்வி நிறுவனங்களின் தலைவர் மோகன் கார்த்திக், நடிகர் அருண்குமார் ராஜன் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 26 சாதனை பெண்கள் மற்றும் யாருடைய உதவியும் இன்றி தானாகவே படித்து, முயற்சி செய்து தற்போது கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் திருநங்கை சமீரா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இதில் மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் முத்துசாமி, அருண்குமார், மனோரஞ்சிதம், மாணிக்கவாசகம், திவ்யா, அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகிகள் கண்ணாம்பாள், சதீஷ்குமார், சுரேஷ், மலர், புவனேஷ்வரி உள்பட அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முன்னதாக மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனர் சுந்தரம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்–டது.

Tags:    

Similar News