தாராபுரம் நகராட்சி பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை
- நகராட்சி பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பில் புதிய உரக்கிடங்கு அமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டது.
- பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சி பகுதியில் தார் சாலை மற்றும் உரக்கடங்கு உள்ளிட்ட ரூ.46 லட்சம் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாபபு கண்ணன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் முன்னிலை வகித்தார். அப்போது திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்து கூறியதாவது:-தாராபுரம் நகராட்சி பகுதியில் சுமார் 40ஆண்டு காலமாக முடிக்கப்படாத குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட பணிகளை திமுக., அரசு பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பணியில் முழு முயற்சியில் இப்பணிகளை நிறைவேற்றியதுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதில் அலங்கியம் சாலை முதல் உடுமலை சாலைவரை ரூ.16 லட்சம் மதிப்பில் தார்சாலையும்,அரசமரம் பகுதியில் ரூ.6லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பித்தல்,நகராட்சி பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பில் புதிய உரக்கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.இதன் அனைத்து பணிகளும் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என கூறினார்.
நிகழ்ச்சியின் போது தி.மு.க., நகர செயலாளர் எஸ். முருகானந்தம், பொறியாளர் சண்முக வடிவு,மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர், நகரத் தலைவர் கதிரவன், நகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, புனிதா, கமலக்கண்ணன், துரை சந்திரசேகர், சீனிவாசன் முத்துலட்சுமி,தேவி அபிராமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.