உள்ளூர் செய்திகள் (District)

கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி.

நாட்டின் முன்னேற்றத்துக்கான பட்ஜெட் - கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமி வரவேற்பு

Published On 2023-02-02 09:57 GMT   |   Update On 2023-02-02 09:57 GMT
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்குவது, மருத்துவத்துறையில் ஆய்வுகளை ஊக்குவிப்பது போன்றதிட்டங்கள் இதன் சிறப்பம்சம் ஆகும்.

திருப்பூர்:

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி, பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும்சேவை, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு,பசுமை வளர்ச்சி,இளைஞர் நலன் உள்ளிட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பு சிறப்பானதாகும்.நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்குவது, மருத்துவத்துறையில் ஆய்வுகளை ஊக்குவிப்பது போன்றதிட்டங்கள் இதன் சிறப்பம்சம் ஆகும். அரசு ஊழியர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள இணையதளம் மூலம்கற்பிக்கும் கர்மயோகி திட்டம், 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சிறப்பான திட்டம் ஆகும்.

நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாசுபடுத்தும் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்துக்கு கூடுதல் நிதி அமல்படுத்தியது வரவேற்கத்தக்கது. இந்தபட்ஜெட் நாட்டின் நலனுக்காகவும், முன்னேற்றத்து க்காகவும் செயல்படுத்தியது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News