உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி ஏற்றுக்கொண்ட காவல்துறையினர்.

காங்கயம் காவல் நிலையத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

Published On 2022-11-28 06:32 GMT   |   Update On 2022-11-28 06:52 GMT
அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவோம் என அரசு அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொள்வது வழக்கம்.

காங்கயம்:

ஆண்டு தோறும் நவம்பா் 26 ம் நாள் அரசியலமைப்பு சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவோம் என அரசு அலுவலா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொள்வது வழக்கம்.

அதன்படி காங்கயம் காவல் நிலையத்தில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது. இதில், காங்கயம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாா் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

Tags:    

Similar News