முத்தூர் பகுதிகளில் 7 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் 21-ந் தேதி நடக்கிறது
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.
- முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
வெள்ளகோவில் :
தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கும் பொருட்டு 34-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன்படி முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி, வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.
இம்முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியை இலவசமாக போடுகின்றனர்.