மரவள்ளிக்கு நல்ல விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி
- கடந்த ஆண்டு ஒரு டன் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றது.
- ஓராண்டு பயிரான குச்சிக்கிழங்கு ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய் விலை போகிறது.
திருப்பூர் :
கடந்த ஆடி பட்டத்தில் சாகுபடி செய்த மரவள்ளி தற்போது அறுவடை துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஒரு டன் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. ஆனால், பல விவசாயிகள் மரவள்ளி சாகுபடி செய்ய விரும்பிய போதும் விதைக்கரணைக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக சாகுபடி பரப்பு பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. தற்பொழுது மரவள்ளிக்கு நல்ல விலை கிடைப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:- ஓராண்டு பயிரான குச்சிக்கிழங்கு ஒரு டன் 15 ஆயிரம் ரூபாய் விலை போகிறது. ஆள் தட்டுப்பாட்டை சமாளிக்க மரவள்ளி சாகுபடி செய்கிறோம். நன்றாக விளைந்தால் ஒரு ஏக்கருக்கு 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.சராசரியாக ஏக்கருக்கு 10 டன் கிடைத்தால் கூட லாபம் தான். சிப்ஸ் தயாரிப்பாளர்கள் பெருமளவில் கொள்முதல் செய்கின்றனர். தக்காளி, கத்தரி போன்ற காய்கறிகள் விலை வீழ்ச்சியை சந்தித்த நிலையில் மரவள்ளிக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டு குச்சிக்கிழங்கு சாகுபடி அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.