உள்ளூர் செய்திகள்

கணக்கம்பாளையம் ஊராட்சியில் சபை கூட்டம் நடைபெற்ற காட்சி.

கணக்கம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Published On 2022-08-17 06:48 GMT   |   Update On 2022-08-17 06:48 GMT
  • 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • மாவட்ட திட்ட இயக்குனர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சிகள் ) ஸ்ரீதர், லதா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் , அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஊராட்சியின் வரவு செலவு, சுகாதாரம் ,பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா திட்டம் ,கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டம், வறுமை குறைப்பு திட்டம், இளைஞர் திறன் திருவிழா, உழவர் நலத்துறை, குழந்தைகள் அவசர உதவி, வாக்காளர் பட்டியலில்ஆதார் எண் இணைத்தல், நியாய விலைக் கடைகளில் சமூக தணிக்கை ,நமக்கு நாமே திட்டம் குறித்து 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி நடத்தினார் . ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News