அவினாசி அருகே கன்னிமார் சுவாமிகள் கும்பாபிஷேக விழா
- காலை 7 மணி அளவில் திருக்குடங்கள் திருக்கோவிலில் வளம் வந்தது.
- 2 ந்தேதி காலை 8 மணி அளவில் விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பழங்கரை ஊராட்சி நல்லி கவுண்டம்பாளையத்தில் கன்னிமார் சுவாமிகள் கருப்பராயன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த ஆறு மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. இதையடுத்து நேற்று இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கடந்த 1 ந்தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வேள்வி ஆகியவை நடந்தன. அன்று காலை 10 மணியளவில் பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்று சுவாமி வழிபாடு செய்தனர். 2 ந்தேதி காலை 8 மணி அளவில் விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது.
மாலை 3 மணி முதல் 4 மணி வரை நிலத்தேர் வழிபாடு, என் திசை காவலர் வழிபாடு, காப்பு அணிதல், ஆகியவை நடந்தன. மாலை 6 மணிக்கு முதல் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், அருளாளர் அமுதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. 3-ந் தேதி காலை 5 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 6 .45 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு திருமுறை விண்ணப்பம் நடந்தன.
காலை 7 மணி அளவில் திருக்குடங்கள் திருக்கோவிலில் வளம் வந்தது. இதை அடுத்து 8 மணியளவில் வினாயகர் விமானம் மற்றும் மூல மூர்த்திகளாகிய, கருப்பண்ணசாமி, கன்னிமார் சாமிகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் அவினாசி, நல்லி கவுண்டம்பாளையம், பழங்கரை,திருப்பூர், மேட்டுப்பாளையம், சந்தியங்கலம், மைசூரு, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.