உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நஞ்சராயன்குளம் பாதுகாப்பு கோரிக்கை மாநாடு

Published On 2023-05-15 04:37 GMT   |   Update On 2023-05-15 04:37 GMT
  • நஞ்சராயன் குளத்தின் வடிநிலப்பகுதிகள் பாதுகாப்பற்று கிடக்கின்றன.
  • குளக்கரையில் உள்ள 8.90 ஏக்கர் நிலம் தனியாருக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோரிக்கை மாநாடு திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, கூலிபாளையம் நால் ரோடு பகுதியில் நடந்தது. மாநாட்டுக்கு தலைமை வகித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் பேசினார்.

இதில் எம்.பி., சுப்பராயன் பேசுகையில், திருப்பூரின் வரலாற்றில் முக்கிய பங்குவகிக்கும் நஞ்சராயன் குளத்தின் வடிநிலப்பகுதிகள் பாதுகாப்பற்று கிடக்கின்றன. குளத்தை காப்பாற்றி பூங்கா அமைக்கவேண்டும் என்கிற நியாயமான கோரிக்கை வெற்றிபெறும் என்றார்.

மேயர் தினேஷ்குமார் பேசுகையில், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, தீர்வு ஏற்படுத்தித்தருவோம்,' என்றார். தமிழக அரசு 17வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளத்தை அறிவித்துள்ளது. குளக்கரையில் உள்ள 8.90 ஏக்கர் நிலம், கடந்த ஆட்சி காலத்தில், தனியாருக்கு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. நிலத்தை மீட்டு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்க பிரதிநிதி கிருஷ்ணசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம், கொங்கு மக்கள் தேசிய கட்சி மாநகர செயலாளர் ரவி, இயற்கை கழகம் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News