உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம்

Published On 2023-04-28 11:00 GMT   |   Update On 2023-04-28 11:00 GMT
  • வழக்கமாக, அரசுப்பள்ளிகளில் 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள், ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
  • பிற மாநில குழந்தைகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

தாராபுரம் :

திருப்பூர் மற்றும் சுற்று ப்பகுதி அரசுப்பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி உள்ளரன். தற்போது, ஒன்பதாம்வகுப்பு வரை தேர்வுகள் நடப்பதால், அருகிலுள்ள குடியிருப்புகளில் பள்ளி செல்லும் வயதிலுள்ள மாணவர்களின் பெயர்களை மட்டும், நேரடியாக சென்று ஆசிரியர்கள் பதிவிட்டு வருகின்றனர். நடப்பாண்டில் புதிய மாற்றாக சேர்க்கைக்கான வயது வரம்பிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அரசு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:-

வழக்கமாக, அரசுப்பள்ளிக ளில் 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள், ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுகின்றனர். ஜூலைக்கு முன்பும், பின்பும் என்ற முறையில் மாணவர்களின் வயது கணக்கிடப்படுகிறது.ஆனால் நடப்பாண்டில் ஜூலையிலி ருந்து தற்போது டிசம்பர் வரை பிறந்த மாணவர்கள் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் இந்த மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி பெற்ற பின்னரே, சேர்க்கை எண்ணிக்கையில் முழுமையான பதிவிட முடியும் என்றனர்.

உடுமலை நகர அரசு பள்ளிகளிலும் பிற மாநில குழந்தைகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் உள்ள தென்னைநார் தொழி ற்சாலை, கோழிப்பண்ணை களில் பீகார், ஒடிசா மாநிலங்களைச்சேர்ந்த பலரும் பணி செய்கின்றனர்.நடப்பாண்டில் உடுமலை நகரப்பகுதியிலும் இந்த குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

Tags:    

Similar News