100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடா்ந்து வழங்க வேண்டும் - பொது தொழிலாளா் நல அமைப்பினா் கோரிக்கை
- தற்போது உள்ளபடியே, 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடா்ந்து வழங்க வேண்டும்.
- மின் இணைப்பு வேண்டி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி முறையாகவும் துரிதமாகவும் மின்இணைப்பு வழங்கவேண்டும்.
திருப்பூர்:
வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்க வேண்டும் என அனைத்து பொது தொழிலாளா் நல அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அமைப்பின் பொது செயலாளா் ஈ.பி.சரவணன் திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் பெயரில் அனுப்பியுள்ள குறுச்செய்தியால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும் இதில் கட்டண விகிதமும் மாற்றம் செய்யப்பட்டதாக வந்த தகவல்படி, கட்டணம் இரண்டரை மடங்கு கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. ஆகவே தற்போது உள்ளபடியே, 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடா்ந்து வழங்க வேண்டும். மின் இணைப்பு வேண்டி, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி முறையாகவும் துரிதமாகவும் மின்இணைப்பு வழங்கவேண்டும். திருப்பூா் பகுதிகளிலுள்ள அனைத்து அலுவலகத்திற்கும் ஒரே மாதிரியான மின்வாரிய சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.