4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.129 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல்
- பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.
- கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர் மற்றும் காங்கயம் ஆகிய 4 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. அதன்படி இந்த விற்பனை கூடங்களிலும் இதுவரை 9,844 விவசாயிகளிடமிருந்து ரூ.129 கோடி மதிப்பிலான 12,145 மெட்ரிக் டன் அரைவை தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. கொப்பரை கொள்முதல் கால நீட்டிப்புக்கான கருத்துரு மேல் நடவடிக்கைக்காக இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக பொள்ளாச்சியில் தென்னை சார்ந்த பொருட்களின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு முதன்மை பதப்படுத்தும் மையம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.