உள்ளூர் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்ற காட்சி. 

தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Published On 2023-02-26 06:49 GMT   |   Update On 2023-02-26 06:49 GMT
  • முகாமில் மொத்தம் 710 பயனாளிகள் கலந்து கொண்டனர்.
  • வேணுகோபாலு, செயலாளர் கே.வி.விஷ்ணு செந்தூரன் ஆகியோர் வரவேற்றனர்.

 தாராபுரம்:

தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர் அ.சேனாபதி கவுண்டரின் 31-வது நினைவு நாள் மற்றும் கல்லூரியின் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் 26-ம் ஆண்டு மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமான கே. எஸ். என் .வேணுகோபாலு தலைமை தாங்கினார். தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு கலந்து கொண்டு கல்லூரி நிறுவனர் சேனாபதி கவுண்டர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, ரிப்பன் வெட்டி முகாமை தொடங்கி வைத்தார்.

அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நரேந்திரன்,கல்லூரி பொருளாளர் கே.வி.தேன்மொழி வேணுகோபாலு, செயலாளர் கே.வி.விஷ்ணு செந்தூரன் ஆகியோர் வரவேற்றனர். அாிமா மாவட்ட நல்லெண்ணத்தூதுவா் கோபாலகிருஷ்ணன்,பசுவதா டெய்ரி செல்வரத்தினம், மணிவண்ண சுதேவன்,கல்லூரி அறங்காவலர்கள் சுவாதி ஹர்சன், டாக்டர் ஹர்சன், டி. அபிராமி விஷ்ணு செந்தூரன், சங்கரண்டாம்பாளையம் இளைய பட்டக்காரர் கணேஷ், அறங்காவலர்கள் சவுந்திரராஜன், எஸ்.கே.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மொத்தம் 710 பயனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 165 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 4 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுவரை நடைபெற்ற முகாம்களில் 14 ஆயிரத்து 855 பேர் கலந்து கொண்டதில் 5ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் அரிமா ஆலோசனை குழு உறுப்பினா்கள் தங்கராசு, செல்லமுத்து, மண்டல தலைவா் சண்முகவேல், வட்டார தலைவா் கோபால கிருஷ்ணன்,நகர அாிமா சங்க தலைவா் ஆயிமுத்து ரத்தினம்,செந்தில் குமார்,சங்கரண்டாம்பாளையம் இளைய பட்டக்காரர் கணேஷ்,அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்கிற பழனிசாமி, காடேஸ்வரா பெரியசாமி, பொறியாளர் ஜேம்ஸ், நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த், இ.பி.கோவிந்தசாமி, ஆபிஸ் தோட்டம் செல்லமுத்து உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் கல்லூரி முதல்வர் முரளி நன்றி கூறினார்.

Tags:    

Similar News