உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

வடகிழக்கு பருவமழைக்கு முன்பே நிரம்பும் தருவாயில் குளம், குட்டைகள்

Published On 2022-10-31 07:06 GMT   |   Update On 2022-10-31 07:06 GMT
  • வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பல குட்டைகளில் நீர் தேங்கியுள்ளன. சில குட்டைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
  • பனங்குட்டையில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

அவிநாசி:

அவிநாசி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குளம், குட்டைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டன. இதனால் மழையின் போது அவை நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே பல குட்டைகளில் நீர் தேங்கியுள்ளன. சில குட்டைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

அவ்வகையில் சேவூர் அருகேயுள்ள முறியாண்டம்பாளையம் ஊராட்சியில் உள்ள பனங்குட்டை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கத்தின் மூலம் 1.10 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது.இதன் விளைவாக மழையின் போது சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீர் இக்குட்டையில் நிரம்பியது.

கடந்த 2020 ஜூலையில் பெய்த மழையில் இக்குட்டை நிரம்பியது. மீண்டும் கடந்த ஆண்டு 2021 நவம்பர் மாதம் பெய்த மழையில் குட்டை நிரம்பியது. தொடர்ச்சியாக கடந்த வாரங்களில் இரவு நேரங்களில் இப்பகுதியில் தொடர் மழை பெய்தது. இதில் பனங்குட்டையில் பாதி அளவுக்கு மேல் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பனங்குட்டை நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.போர்வெல் மூலம் தண்ணீர் வினியோகிப்பதில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பிரச்சினை இருக்காது.மாநிலத்தில் வடகிழக்குப்பருவ மழை துவங்கியுள்ள நிலையில் மழை கைகொடுத்தால் குட்டை நிரம்பி தண்ணீர் வெளியேறும் என்றார்.

Tags:    

Similar News