உள்ளூர் செய்திகள் (District)
கோப்புபடம். 

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்து தவறானதகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை - அமைச்சருக்கு தொ.மு.ச. கோரிக்கை

Published On 2022-10-17 06:23 GMT   |   Update On 2022-10-17 06:24 GMT
  • தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர், அக்.17-

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு (மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.) சார்பில் இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழக மின்சார வாரியத்திலுள்ள தொழிலாளர்களிடம் அரசிற்கு எதிராக சென்னையில் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் பணிநிரந்தரம் கிடைக்கும் என பொய் தகவலை பரப்பி தற்கொலை எண்ணத்திற்கு தூண்டி விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஏதேனும் உயிர் இழப்பு ஏற்படும் சூழலில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் இது தொடர்பாக தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News