உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

வரத்து குறைவால் ஆடுகள் விலை உயர்வு

Published On 2022-10-30 05:19 GMT   |   Update On 2022-10-30 05:19 GMT
  • கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
  • 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. அவை மளமளவென்று விற்று தீர்ந்தன.

மூலனூர்:

கடந்த 2 மாதங்களாக மழை பெய்துள்ளதன் காரணமாக ஆடுகளுக்கு தீவனம் கிடைத்ததால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வரவில்லை. இதனால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரத்தில் ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தைக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. அவை மளமளவென்று விற்று தீர்ந்தன.

இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது "தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது .கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது என்றார்.

Tags:    

Similar News