உள்ளூர் செய்திகள்

மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய நிர்வாகிக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கேடயம் வழங்கி கவுரவித்த போது எடுத்த படம்.   

சென்னையில் 14-ந்தேதி நடைபெறும்மகளிர் உரிமை மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் - தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-10-09 07:47 GMT   |   Update On 2023-10-09 07:47 GMT
  • தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
  • ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

  திருப்பூர்:

தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தில் உள்ள தி.மு.க. கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினர்களாக தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், மகளிர் அணி துணைச்செயலாளரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதனை ஒவ்வொரு வாக்குச்சாவடியாக மாவட்ட கழகம் வழங்கும் குறிப்பேட்டில் ஒவ்வொரு வாக்காளர் பெயருடன் பூர்த்தி செய்து, அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலோடு, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.தமிழகம் முழுவதும் மகளிரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 மாதந்தோறும் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் மகளிர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பான திட்டத்தை வழங்கிய முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இ    யங்க தேவையான நிதியை தமிழக அரசு வழங்க கேட்பது. நவம்பர் மாதம் 27-ந் தேதி இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது.சென்னையில் வருகிற 14-ந் தேதி நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் தெற்கு மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் திரளாக பங்கேற்பது, டிசம்பர் மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் திரளாக பங்கேற்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தையொட்டி மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News