உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

காங்கயம் பஸ் நிலையம் நுழைவு வாயிலை வழிமறித்து மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி

Published On 2023-11-21 10:28 GMT   |   Update On 2023-11-21 10:47 GMT
  • திருப்பூர் மாவட்டம் காங்கயம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்ககான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்
  • பஸ் நிலையம் வரும் பயணிகள் இருசக்கர வாகனத்தில் எப்படி நுழைந்து செல்வது என்று மனக்குமறலுடன் சென்று வருகிறார்கள்.

காங்கயம்:

ருப்பூர் மாவட்டம் காங்கயம் மத்திய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்லாயிரக்கணக்ககான மக்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் காங்கயம் பஸ் நிலையத்தின் இருபுறமும் சென்னிலை மெயின் ரோடு பிரிவு உள்ளது.

இதில் தினமும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஏனோ, தானோ என்று நிறுத்தி விட்டு செல்கிறார்கள். இதனால் பஸ் நிலையம் வரும் பயணிகள் இருசக்கர வாகனத்தில் எப்படி நுழைந்து செல்வது என்று மனக்குமறலுடன் சென்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர் கதையாக நடந்து வருகிறது.

இதனால் சில நேரம் பஸ்சிற்கு வரும் பயணிகள் அவச அவசரமாக ஓடி வரும்போது அங்கு நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனம் மீது மோதி கீழே விழும் பரிதாப நிலைமை நீடித்து வருகிறது.

எனவே பயணிகளுக்கு இடையூறாக உள்ள இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் உடனடியாக ஓழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஙகயம் பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காங்கயம் நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News