உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம். 

அவிநாசி அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்- பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2022-07-17 08:14 GMT   |   Update On 2022-07-17 08:14 GMT
  • அம்மன் சன்னதியின் மூல கோபுரத்தில், காடு போல அரச மரங்கள் நன்றாக வளர்ந்து, சிலைகளும், கோபுரத்தின் கட்டுமானமும் சேதமடைந்துள்ளது.
  • கும்பாபிேஷகம் நடந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் கோவிலில் உள்ள கன்னிமார், பேச்சியம்மன் சன்னதிகளின் நிலவறை மேற்கூரை இடிந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றது.

அவிநாசி:

அவிநாசி பேரூராட்சி காந்திபுரத்தில் 200 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. கடந்த 1963ம் ஆண்டு அறநிலையத் துறையின் கீழ் இக்கோவில் கொண்டுவரப்பட்டது. 1981 மற்றும் 2006ம் ஆண்டு கும்பாபிஷேகங்கள் நடந்தன.

கும்பாபிேஷகம் நடந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் கோவிலில் உள்ள கன்னிமார், பேச்சியம்மன் சன்னதிகளின் நிலவறை மேற்கூரை இடிந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றது. மேலும் கொடிமரம் உள்ள பீடத்தின் கால்கள் இடிந்து இரண்டாக பிளந்து நிற்கிறது.அம்மன் சன்னதியின் மூல கோபுரத்தில், காடு போல அரச மரங்கள் நன்றாக வளர்ந்து, சிலைகளும், கோபுரத்தின் கட்டுமானமும் சேதமடைந்துள்ளது. சிலைகளின் வர்ணம் மங்கி பொலிவிழந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட சமுதாயத்தினரின் குல தெய்வமாக விளங்கும் அங்காளம்மன் கோவிலை அறநிலையத் துறையினர் சிறப்பு கவனத்தில் கொண்டு உடனடியாக கும்பாபிஷேகத்தை நடத்திட பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News