உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அவினாசி தாமரை குளக்கரையில் சேதப்படுத்திய இடத்தில் கான்கிரீட் அமைக்க வேண்டும் - குளம் காக்கும் இயக்கத்தினர் கோரிக்கை

Published On 2022-11-12 05:51 GMT   |   Update On 2022-11-12 05:51 GMT
  • இடிக்கப்பட்ட குளக்கரைப்பகுதியை கான்கிரீட் அமைத்து பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • குளக்கரையை பராமரிக்கும் சமயத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருக்க வேண்டும்.

அவினாசி:

அவினாசியிலுள்ள தாமரைகுளத்தில் கடந்த ஒரு வாரமாக குளம் பராமரிப்பு பணிகள் நடந்தது. அப்போது கடந்த 6ம் தேதி அவினாசி சீனிவாசபுரத்திற்கு அருகில் குளக்கரையை 3 மீட்டர் அளவிற்கு எந்திரம் மூலம் வெட்டி தரைமட்டமாக்கப்பட்டது. தகவலறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு வெட்டப்பட்ட குளக்கரையை கான்கிரீட் மூலம் பலப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே அவ்வாறு செய்வதாக உறுதியளித்த நிலையில் அந்த இடத்தில் வெறும் மண்ணை போட்டு மூடிவிட்டதாக கூறி குளம் காக்கும் இயக்கத்தினர் அவசர கூட்டம் நடத்தினர். அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குளக்கரையை பராமரிக்கும் சமயத்தில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருக்க வேண்டும். பராமரிப்பு பணிகளின்போது அங்குள்ள இயற்கை வளங்களை சேதப்படுத்துவதோ, மரங்களை வெட்டுவதோ கூடாது.பராமரிப்பு குறித்து குளம் காக்கும் இயக்கத்தினருக்கு தெரிவிக்கவேண்டும். இடிக்கப்பட்ட குளக்கரைப்பகுதியை கான்கிரீட் அமைத்து பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News