ஆடிப்பெருக்கு உடுமலையில் ஊஞ்சலாடி மகிழ்ந்த பொதுமக்கள்
- தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.
- ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது
உடுமலை:
ஊஞ்சல் என்பது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்கு நாட்டார் இதனை கூலி என்றும் சூரிய என்றும் அழைக்கின்றனர். சிறுவர்கள் விழுதுகளை பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவர் .மரக்கலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுமியரும் ஊஞ்சலாடு வார்கள். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.இந்தநிலையில் ஆடிப்பெருக்கையொட்டி ஜல்லிப்பட்டி, தளி உள்ளிட்ட இடங்களில் சிறுவர் சிறுமிகள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.
ஊஞ்சல் கொண்டாட்டம் குறித்து இப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கூறியதாவது:- ஆடி 18ஐ நோன்பு என்று தான் அழைப்போம். ஒரு நாள் முன்பே ஜல்லிப்பட்டி கிராமத்திற்குசென்று விடுவோம். எப்பொழுது விடியும் என காத்திருப்போம். எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்பு குழந்தைகள் உடன் கதைகள் பேசி தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணி ஆகிவிடும். காலையில் பொம்மையன் கோவில் முன்பு பெரிய மரங்கள் நட்டு பெரிய அகலமான மரப்பலகையை உட்காருவதற்கான வசதியாக அமைப்பார்கள். அதற்கு சந்தனம் குங்குமம் மாவிலை கட்டி மஞ்சள் துணியில் நவதானியங்கள் உள்ளே வைத்து அந்த ஊஞ்சலுக்கு கோவில் பூஜை செய்வர்.
குழந்தைகளுடன் முதல்முறையாக ஊஞ்சல் ஆடும் போது ரோல் கோஸ்டர் ஜெயின்ட் வீல் எல்லாம் தோற்றுவிடும். பெரியவர்கள் தோட்டத்து வேலைக்கு சென்று வந்த பின்பு இரவில் ஊஞ்சலாடி பாட்டுப்பாடி தங்களின் களைப்பை போக்கிக் கொள்வார்கள். முப்பது வருடங்களுக்கு முன்பாக கூட ஆடி 18 தினத்திற்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரிஆடிய துண்டு. ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம் .வீட்டில் இருக்கும் உபகரணங்களிலேயே அதிக மகிழ்ச்சி தரக்கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாக அது குறைந்து காணாமல் போய்விட்டது .இந்த ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.
இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களின் வாழ்க்கைச் சக்கரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். நம் தலைமுறைக்கு குழந்தைக ளுக்கு இதை மறக்காமல் கொண்டு போக வேண்டியது நமது கடமை.
னஇதை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.