உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி- பாதுகாப்பு வழங்க கோரிக்கை

Published On 2023-01-14 03:45 GMT   |   Update On 2023-01-14 03:45 GMT
  • ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி, எந்தவித உரிமையும் இன்றி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வருகிறார் .
  • பிரார்த்தனை கூடம் நடத்தக்கூடாது என்று அவினாசி தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .

அவினாசி :

அவினாசி அருகே பொங்கல் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஜெபக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டுமென கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் செம்பியநல்லூர் ஊராட்சி தாசம்பாளையம் நேரு நகர் பகுதியில் ஒருவர் ஊராட்சி அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அந்த இடத்தில் எந்தவித உரிமையும் இன்றி பிரார்த்தனைக் கூட்டம் நடத்தி வருகிறார் .அங்கு பிரார்த்தனை கூடம் நடத்தக்கூடாது என்று அவினாசி தாசில்தார் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார் .அதையும் மீறி பிரார்த்தனை கூட்டம் நடத்தி வருகிறார்.ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேரு நகர் பொதுமக்கள் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.எங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக மேற்படி நபர் பிரார்த்தனை நடத்த வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தங்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். பொங்கல் பண்டிகை காலத்தில்நாங்கள் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலவரத்தை ஏற்படுத்த இருப்பதாக தெரிய வருகிறது. எனவே கலவரத்தை ஏற்படுத்த இருக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News