உள்ளூர் செய்திகள்

கர்ப்பவதி அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மனை படத்தில் காணலாம்.

அங்காளம்மனுக்கு கர்ப்பிணி அலங்காரம்

Published On 2022-08-03 06:12 GMT   |   Update On 2022-08-03 06:12 GMT
  • கர்ப்பணி பெண்களுக்கு‌ வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
  • ஐந்து வகை சாப்பாடு மூட்டை கட்டி கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.

உடுமலை :

ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, உடுமலைப்பேட்டை ராமசாமி நகர்- டி பகுதி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில், அம்மனுக்கு கர்ப்பவதி அலங்காரம் மிக சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கர்ப்பணி பெண்களுக்கு‌ வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஐந்து வகை சாப்பாடு மூட்டை கட்டி, (கல்கண்டு சாதம், புளி சாதம், தக்காளி சாதம் ,தேங்காய் சாதம், தயிர் சாதம் ) 5 கர்ப்பிணி பெண்களை உட்கார வைத்து சடங்குகள் செய்யப்பட்டன. இப்படி செய்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பது ஐதீகம். பாசிப்பயறு அம்மனின் கர்ப்பத்தில் வைக்கப்பட்டு இரண்டு நாள் கழித்து ,முளை வந்த பிறகு அனைவருக்கும் பிரசாதமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News