உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஜமாபந்தி நிகழ்ச்சியை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடத்த கோரிக்கை

Published On 2023-05-23 11:48 GMT   |   Update On 2023-05-23 11:48 GMT
  • ஆதார், ரேஷன் கார்டு விண்ணப்பம், இட பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் ஜமாபந்தி மூலம் வழங்கப்படுகிறது.
  • ஜமாபந்தியில் உடனடி தீர்வு ஏற்படுத்தியதாக போலி கணக்கு காட்டப்படுகிறது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சிஇன்று தொடங்குகிறது. முதியோர் உதவித் தொகை, கல்வி, திருமண உதவி, பட்டா மாறுதல், ஆதார், ரேஷன் கார்டு விண்ணப்பம், நில அளவை, இட பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் ஜமாபந்தி மூலம் வழங்கப்படுகிறது.

பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் கூறுகையில், தீர்வு காணப்படாத காலதாமதப்படுத்தப்படும் நில அளவை, இட ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, விவசாய பிரச்னை, பட்டா மாறுதல், வாரிசு, ஜாதி சான்றிதழ் கோருதல் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவே ஜமாபந்தி நடத்தப்படுகிறது. ஆனால் ஏற்கனவே தேங்கி கிடக்கும் மனுக்களை கணக்கில் காட்டி, ஜமாபந்தியில் உடனடி தீர்வு ஏற்படுத்தியதாக போலி கணக்கு காட்டப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜமாபந்தியில் மனு அளிக்கும் பலருக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது. மேலும், தீர்க்கப்படாத கோரிக்கையை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே கிராம நிர்வாக அலுவலக வரவு செலவு கணக்குகள் நேர் செய்யப்பட்டு ஜமாபந்தி அதிகாரியால் ஒப்புதல் வழங்கப்படும்.இதன் காரணமாக பல்வேறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. எனவே கண்துடைப்புக்காக நடத்தாமல் ஜமாபந்தி நிகழ்ச்சியை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்றார்.

Tags:    

Similar News