சாலை விபத்து நிவாரண நிதி - 909 பேருக்கு ரூ. 8.64 கோடி நிலுவை
- சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கும் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கும் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.
திருப்பூர் :
சாலை விபத்து நிவாரண நிதிக்கு மாவட்டத்தில் 909 பேருக்கு ரூ. 8.64 கோடி நிலுவையில் உள்ளது. விரைவாக வழங்க வேண்டும் என நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிகுமார் கூறியதாவது:-
தமிழகத்தில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும், காயமடைந்தோருக்கும் முதல்வர் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. சாலை விபத்து மற்றும் இழப்பு குறித்த விவரங்களுடன் இதற்கான விண்ணப்பம் கலெக்டர் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, பயனாளிகளுக்கு முதல்வர் நிவாரண நிதி மூலம் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கப்பட வேண்டும்.அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக 909 பேர் இந்த நிவாரணத்துக்கு தகுதியானோராக தேர்வு செய்யப்பட்டு ரூ.8.64 கோடி நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது.இது குறித்து கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.