உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பிளஸ்-2 துணை தேர்வு எழுதுபவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

Published On 2023-05-22 07:34 GMT   |   Update On 2023-05-22 07:34 GMT
  • ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
  • தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும்.

திருப்பூர் :

கடந்த 8ந்தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 19ந் தேதி துணைத்தேர்வு நடக்குமென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு ஒரு மாதம் இருப்பதால் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேர்வுத்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரகம் வாயிலாக, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வுக்கு வருகை புரியாத மாணவ, மாணவிகளை முதலில் கண்டறிய வேண்டும். தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர் விபரத்தை வகுப்பாசிரியர் மூலம் சேகரித்து அவர்களை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஊக்கப்படுத்த வேண்டும். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுநர், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் உதவியோடு ஆலோசனைகளை வழங்கி துணைத்தேர்வெழுத ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஆசிரியர் பணியிடம் சூழலுக்கு தக்கவாறு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த தேவையான உரிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும். பயிற்சி மாணவர்களை பங்கேற்க செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்த வாரம் அல்லது மே இறுதியில் துணைத்தேர்வு எழுத உள்ள மாணவருக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை செய்து வருகிறது. பிளஸ் -2 தேர்வு முடிவு 8-ந் தேதி வெளியாகிய நிலையில் தேர்ச்சி பெறாத தேர்வுக்கு வராத மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. கடந்த 17ந்தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் நாளை 23-ந் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News