உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சாகுபடி பணிகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியம், வாடகையில் வேளாண் எந்திரங்கள், நிலத்தடி நீர்மட்டத்தை அறியவும் ஏற்பாடு

Published On 2022-11-07 06:42 GMT   |   Update On 2022-11-07 06:42 GMT
  • வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
  • னியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

திருப்பூர் :

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.

அதன்படி வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் மானியவிலையில் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் 2022-23 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் கருவிகள் வழங்குவது, வாடகைக்கு விடும் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிகபட்சமாக டிராக்டருக்கு ரூ.4.25 லட்சம் , விசையால் களை எடுக்கும் கருவிகள் 35 ஆயிரம் , ரோட்டவெட்டரான சூழற்கலப்பைகள் 45 ஆயிரம் ரூபாய், விசைத் தெளிப்பான் கருவிகள் ரூ.3,100 ரூபாய் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதர விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச மானியம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை மானியத்தில் விவசாயிகள் பெற்றிடும் வகையில் 5 டிராக்டர்கள் 8 பவர்டில்லர்கள், 1 விசையால் களையெடுக்கும் கருவிகள், 3 ரோட்டவேட்டர், தட்டு வெட்டும் கருவி 4, தென்னை மட்டை துகளாக்கும் கருவி 2, இரண்டு விசைத் தெளிப்பான்கள் ஆகியவற்றிற்கு 29 லட்சத்து 53 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதி விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கருவிகளை பெற்றிட அந்தந்த பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தினை அளித்து மூதுரிமை அடிப்படையில் விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறுப்பு ) ஆர்.சுப்பிரமணியனின் செல்போன் எண் 9942703222, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் , 7904087490, உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் , 9865497731 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேளாண்மைப்பொறியியல் துறை மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடைப்பணிகள், நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ள குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

விவசாய நிலத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் (உழவுக்கருவியுடன்) 1 மணி நேரத்திற்கு ரூ.500 வாடகையிலும், மண் தள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.1,230 ம், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.890 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.450 என்ற வாடகையிலும் வழங்க வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் நில நீர் ஆய்வுக்கருவியின் உதவியால் நிலத்தடி நீர்மட்டத்தை அறிந்து கொள்ளதிருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை விவசாய பெருமக்கள்பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவசாயம்நிலங்களுக்கு ரூ.500 வீதம் மற்றும் விவசாயம் அல்லாத பணிகளுக்குரூ.1000 கட்டணமாக உழவன் செயலி (UZHAVAN APP) மூலம்அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.இது தொடர்பாக செயற்பொறியாளர் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, திருப்பூர் அலுவலகத்தின் உதவிப்புவியியலாளர் அஞ்சனா மேத்யூவை 7994162692 தொடர்பு கொண்டுபயன்பெறுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News