உள்ளூர் செய்திகள்

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-07 10:34 GMT   |   Update On 2022-07-07 10:34 GMT
  • தமிழக அரசு உடனடியாக தற்காலிக ஆசிரியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
  • 4 கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் :

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நியமனம் செய்ய தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போதுதமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வரக்கூடிய சூழ்நிலையில் ஏற்கனவே பயிற்சி முடித்த தங்களுக்கு இதுவரை பணி வழங்கப்படவில்லை. தமிழக அரசு உடனடியாக தற்காலிக ஆசிரியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

ஆசிரியர் பணி நியமனத்தின் போது பழையபடி வயது வரம்பு தளர்வு செய்து பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 4 கோரிக்கையை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

Tags:    

Similar News