உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் லோகோ பொறித்த பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

திருப்பூரில் செஸ் ஒலிம்பியாட் போட்டி - லோகோ அமைப்பு

Published On 2022-07-11 08:31 GMT   |   Update On 2022-07-11 11:21 GMT
  • 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏறத்தாழ 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
  • லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாக அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 10-ந்தேதி வரை இப்போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏறத்தாழ 2,500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டி என்ற நிலையில் தமிழக அரசு இப்போட்டி நிகழ்வுகளை பிரபலப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் இதற்கான லோகோ சதுரங்க குதிரை வடிவம் தம்பி என்ற பெயருடன் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்த லோகோ பொதுமக்கள் மத்தியில் சென்று சேரும் விதமாகவும், போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையிலும், முக்கிய அரசு துறை அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் இந்த லோகோ பொறித்த பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News