உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்

திருப்பூர் காதர்பேட்டை கருப்பண்ண பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் - நாளை நடக்கிறது

Published On 2023-02-04 06:24 GMT   |   Update On 2023-02-04 06:24 GMT
  • கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெறுகிறது.
  • அலங்காரம், தசதானம், தச தரிசனம், மகா தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெறுகிறது.

திருப்பூர்:

திருப்பூர் காதர் பேட்டை நேரு வீதியில் உள்ள ஸ்ரீ கருப்பண்ண பிள்ளையார், ஸ்ரீ குபேர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் நடைபெறுகிறது.இதையொட்டி இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு மகா கணபதி, மகாலட்சுமி யாகம் நடக்கிறது. தொடர்ந்து முதலாம் கால யாக பூஜைகள், விமான கலசம் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெறுகிறது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு மேல் ஸ்ரீ குபேர விநாயகருக்கு இரண்டாம் கால யாக பூஜை, சூர்ய சந்திர பூஜை, நாடி சந்தானம், மகாபூர்ணாகுதி, தீப ஆராதனை, 5 மணிக்கு மேல் யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 5:30 மணிக்கு கோபுர கலசங்கள், கும்பாபிஷேகம், மூர்த்தி மற்றும் பரிவார மும்மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை தொங்குட்டிபாளையம் ஸ்ரீ சுயம்பு காரண பெருமாள் கோவில் அர்ச்சகர் விஷ்ணு ஸ்ரீ மணிவண்ண பட்டர் நடத்துகிறார். தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், தசதானம், தச தரிசனம், மகா தீபாரதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெறுகிறது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.பி. குப்புசாமி, திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகர மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி (ஓய்வு) ஆறுமுகம், மாஸ் கார்மெண்ட்ஸ் சரவணன், கேண்டி கார்மெண்ட்ஸ் வடிவேலு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முத்துலட்சுமி தண்டபாணி, சுப்பிரமணி, கந்தராஜ், கஜேந்திரன், கார்த்தி, திருமூர்த்தி, .சிவசந்திரன் மற்றும் கே. சீனிவாசன் ஆகியோர் செய்துள்ளனர்.  

Tags:    

Similar News