உள்ளூர் செய்திகள்

தக்காளி விற்பனை செய்யப்படும் காட்சி

தக்காளி ஒரு கிலோ ரூ.40க்கு விற்பனை - பொதுமக்கள் மகிழ்ச்சி

Published On 2023-08-19 07:35 GMT   |   Update On 2023-08-19 07:35 GMT
  • ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
  • விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தக்காளியை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி விலை உச்சத்தில் இருந்த போது, அறுவடை செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்து பலர் லட்சத்தில் சம்பாதித்தனர்.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலங்களில் தக்காளி விளைச்சல் அதிகரிக்கவே இங்கிருந்து ஏற்றுமதியான தக்காளி குறையத்தொடங்கிய நிலையில் தற்போது 15 கிலோ கொண்ட ஒரு டிப்பர் தக்காளி ரூ. 400-க்கு விற்கப்படுகிறது.

திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த தக்காளி மொத்த வியாபாரி எஸ்.ஆர்.எம். ரவி கூறும்போது, தக்காளி விலை படிப்படியாக குறைந்துள்ளது. தற்போது ஒரு டிப்பர் தக்காளி நல்ல ரகம் ரூ. 400-க்கு விற்பனையாகிறது. ரூ. 28 முதல் ரூ. 30 வரை கொள்முதல் செய்யப்படும் தக்காளி, தற்போது வெளிச்சந்தையில் ரூ. 40-க்கு விற்கப்படுகிறது. 2 மற்றும் 3-ம் ரக தக்காளிகள் ஒரு டிப்பர் ரூ. 200க்கு கொள்முதல் செய்யப்பட்டு, வெளிச்சந்தைகளில் ரூ. 20-க்கு விற்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் விலை உச்சத்தில் இருந்தபோது, விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு இங்கிருந்து சென்ற தக்காளி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அறுவடை தொடங்கிவிட்டதால், இங்கு பற்றாக்குறை இல்லை. ஆகவே விவசாயிகள் தற்போது நிலையான விலை இருந்தால் போதும் என்று கருதுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News