உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வினோத தோல் நோயால் பாதித்த சிறுவனுக்கு சிகிச்சை - முதல் அமைச்சரிடம் தந்தை மனு

Published On 2022-08-27 07:00 GMT   |   Update On 2022-08-27 07:00 GMT
  • உடலில் தோல் அடிக்கடி உரியும் வியாதி உள்ளது.
  • அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியும் பலனில்லை.

திருப்பூர் :

திருப்பூர் கருவம்பாளையத்தில் வசிப்பவர்கள் பிரேம்குமார் - ஜெயசித்ரா தம்பதி. இவர்களுக்கு பொன் குமரன் என்ற 8 வயது மகனும், ஒரு மகளும் உள்ளனர். பொன் குமரனுக்கு பிறந்தது முதலே உடலில் தோல் அடிக்கடி உரியும் வியாதி உள்ளது.நேற்று முன்தினம் திருமுருகன்பூண்டியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மனு வழங்க அவர் செல்லும் வழியில் பிரேம்குமார் நின்றிருந்தார். முதல்-அமைச்சரின் பாதுகாவலர்கள் மனுவை வாங்கி, முதல்-அமைச்சரிடம் வழங்கினர்.

மனுவில், என் மகனுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது.அரசு மற்றும் பல்வேறு அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கியும் பலனில்லை. அவனை நாள் முழுக்க கவனிக்க வேண்டியுள்ளதால், எங்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாத நிலையுள்ளது. மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வரும் எங்களின் நிலை உணர்ந்து, எங்கள் பிள்ளைக்கு சரியான மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

Tags:    

Similar News