காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
- 119 வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 21,480 மரங்களை நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காங்கேயம் :
காங்கேயம் சுற்று வட்டாரங்களில் சுற்றுச்சூழல் நலன் மேம்படுத்தும் வகையில்பள்ளிகள், தோட்டங்கள்,கோவில் மற்றும் பொது வளாகங்க ளில் மக்களின் முழு ஒத்துழைப்புடன் காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் தொடர்ந்து மரக் கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
21,480 மரங்களை நட்டு பராமரிக்கும் பணியின் தொடர்ச்சியாக 119 வது கட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி காங்கயம், தாராபுரம் ரோட்டிலுள்ள காடையீஸ்வரா நகரில் நடைபெற்றது. நிகழ்ச்சியை காங்கயம் ஊராட்சி ஒன்றிய தலைவர் டி.மகேஷ் குமார், காங்கயம் நகர் மன்ற தலைவர் என்.சூரிய பிரகாஷ், சாம்சன் சி.என்.ஓ.இன்டஸ்டிரீஸ் நல்லி எஸ்.மோகன் குமார், காங்கயம் சிவா ஏஜென்சி சிவசுப்பிரமணி, ஊதியூர் புளூ மெட்டல்ஸ் டி.ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னின்று தொடங்கி வைத்தனர். இதில் துளிகள் அமைப்பினர், பொதும க்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.