உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட காட்சி.கும்பாபிஷேகத்தில் பங்கேற்றவர்கள்.

உடுமலை காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2023-03-27 07:05 GMT   |   Update On 2023-03-27 07:28 GMT
  • கடந்த 24-ந்ேததி காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்கியது.
  • மங்கள இசை, நவகிரக ஹோமம், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது.

உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நேருவீதியில் காமாட்சிஅம்மன் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பா பிஷேக விழா நடத்துவது என பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக புனரமை ப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அதன் முதல் நிகழ்வாக கடந்த 24-ந்ேததி காலை 5 மணிக்கு கோ பூஜையுடன் விழா தொடங்கியது. மங்கள இசை, விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் உள்ளி ட்டவை நடைபெற்றது. 2 ம் நாள் நிகழ்வாக 25-ந்தேதி காலை 7 மணிக்கு மங்கள இசை, நவகிரக ஹோமம், மாலை 5 மணிக்கு முதல் கால பூஜை நடை பெற்றது. நேற்று காலை 6 மணிக்கு 2-ம் கால பூஜை , 10:30 மணிக்கு விமான கலசங்கள் ஸ்தாபன நிகழ்ச்சி, மாலை 5 மணிக்கு 3-ம் கால பூஜை நடைபெற்றது.இன்று காலை 9 மணிக்கு விமான கலசங்கள், மங்கள வாத்தியங்களுடன் மூலாலயம் எழுந்தருளலும், 9.30 மணிக்கு காமாட்சி யம்மன் மற்றும் பரிவார விமான ங்களுக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது. அதை த்தொடர்ந்து மகாஅபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யா ணமும் அதைத் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தேவராட்டம், மங்கள வாத்தியங்கள் முழங்க முளைப்பாரிகை ஊர்வலமும், 6.30 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் குமர குருபர சுவாமிகள், ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூகம், தலைவர் ராமராஜ் செட்டியார், அறங்காவலர் குழு நவநீதன், ஆறுச்சாமி, கோவிந்தராஜன், துரை அங்குசாமி, ராமராஜ், ராஜேந்திரன், முருகன் , அய்யப்பன், காளிதாஸ், சசிகுமார், ஆறுமுகம், மெய்யப்பன், சண்முக சுந்தரம், சவுந்தர குமார் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சண்முக சுந்தரம், மாரியம்மன் கோவில் அறங்காவலர் யு.எஸ்.எஸ். ஸ்ரீதர், டி.எஸ்.பி., தேன்மொழிவேல் மற்றும் உறுப்பினர்கள் மலையாண்டி, காமாட்சி குமார், கிருஷ்ணகுமார், தங்கவேல், அசோகன், கார்த்திக்கேயன், சாமிநாதன், நந்தகுமார், நவீன் பிரசாத், விஸ்வநாதன், பத்மநாபன், வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News