உள்ளூர் செய்திகள்

சாத்தனூர் அணையிலிருந்து 3,440 கன அடி நீர் வெளியேற்றம்

Published On 2022-11-12 07:45 GMT   |   Update On 2022-11-12 07:45 GMT
  • 9 ஷட்டர்கள் வழியாக பாய்கிறது
  • ஆற்று வெள்ளத்தில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.

தற்போது அணையில் 116.30 அடி அளவிற்கு அதாவது 6 ஆயிரத்து 722 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் மழையாலும், கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதாலும் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 240 கன அடி நீர் வீதம் வந்து கொண்டிருக்கிறது.

அணை நிரம்ப இன்னும் 2 அடியே உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி முன்பகுதியில் உள்ள 9 ஷட்டர்கள் வழியாக 3,440 கன அடி தண் ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் சீறிப்பாய்ந்து விழுவதை சுற்றுலா பயணிகள் கண்ணுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இதனால் தென்பென்னை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News