உள்ளூர் செய்திகள்

பெண்கள் பால்குடம் ஊர்வலம் வந்த காட்சி

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா

Published On 2022-07-28 09:10 GMT   |   Update On 2022-07-28 09:10 GMT
  • பெண்கள் பால்குடம் ஊர்வலம்
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இன்று ஆடி திருவிழா முன்னிட்டு 501 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாம்பட்டு கிராமத்தில் உள்ள குளக்கரையில் இருந்து பால் குடங்களை பெண்கள் தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு பக்தர்களின் கைகளால் பாலபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மங்கள மேள வாதியுங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த பால்குட ஊர்வல நிகழ்ச்சியில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News