உள்ளூர் செய்திகள்
ஆரணியில் மாதந்தோறும் நகர சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்
- அ.தி.மு.க. கவுன்சிலர் வலியுறுத்தல்
- அரசு அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
இதில் திமுகவை சேர்ந்த ஏ.சி மணி என்பவர் நகர மன்ற தலைவராகவும் நகர மன்ற துணை தலைவராக அதிமுகவை சேர்ந்த பாரி பாபு என்பவரும் உள்ளிட்ட 33 கவுன்சிலர்கள் உள்ளனர்.
நேற்று ஆரணி நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டம் நகர மன்றத் தலைவர் ஏ.சி மணி தலைமையில் நடைபெற்றது.
பின்னர் அதிமுக கவுன்சிலர் பேசியாதவது : மக்களின் பிரச்சனையை எடுத்துரைப்பதற்கு மாதம் மாதம் நடைபெற வேண்டிய நகர மன்ற கூட்டம் 3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறுவதால் மக்களின் பிரச்சினையை நகர மன்ற கூட்டத்தில் முன்வைக்க முடியவில்லை என்று நகர மன்ற உறுப்பினர் குற்றசாட்டினார்
இதில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் ராஜ விஜய காமராஜ், உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.