உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது
- மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 18-வது நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடக கலைஞர்கள் துரியோதனன் பீமன் திரவுபதி, காந்தாரி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து கொண்டு தற்போது உள்ள இளைஞர்களுக்கு மகாபாரதம் எப்படி நடைபெற்றது என்று தத்துரூபமாக நடித்துக் காண்பித்தனர்.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை காண 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை கண்டு களித்து சென்றனர்.