உள்ளூர் செய்திகள்

படவேடு ரேணுகாம்பாள் கோவில் மைதானத்தில் கலெக்டர் முருகேஷ் மரக்கன்றுகளை நட்டு வைத்த காட்சி.

படவேட்டில் மனுநீதி நாள் முகாம்

Published On 2023-04-27 07:34 GMT   |   Update On 2023-04-27 07:34 GMT
  • கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
  • 9 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை:

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவில் இன்னிசைக் கச்சேரி மேடையில் நேற்று மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி 219 பயனாளிகளுக்கு ரூ. 13லட்சத்து 38ஆயிரத்து மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் 9 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 3 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.

முகாமிற்கு கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ., ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு வரவேற்று பேசினார்.

ஊட்டச்சத்து, கால்நடைத்துறை உள்பட பல்வேறு கண்காட்சிகளை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மகாதேவன், மாறன், செந்தில்குமார், தனி தாசில்தார் செந்தில்குமார், படவேடு ரேணுகாம்பாள் கோவில் செயல் அலுவலர் சிவஞானம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நடராஜன், படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணை தலைவர் தாமரை ச்செல்விஆனந்தன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News