100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, செஞ்சி, சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் கிராமப் பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணி செயல்பட்டு வருகிறது.
இதில் மாற்று திறனாளிகளுக்கு 100 நாட்கள் முழுவதுமாக வேலை தர வேண்டும், மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக வருகை பதிவேடு வழங்க வேண்டும், மேலும் மத்தியஅரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் அரசு ஆணைப்படி 4 மணி நேரமே பணி செய்ய வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி இந்திராணியிடம், மனு அளித்தனர். இதில் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர்.