உள்ளூர் செய்திகள்

பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற 7 மாணவர்கள் பள்ளியில் சேர்த்த காட்சி.

பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற 7 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர்

Published On 2022-09-24 10:39 GMT   |   Update On 2022-09-24 10:39 GMT
  • சேத்துப்பட்டு அன்மருதை கிராமத்தில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை, கலெக்டர் முருகேஷ், உத்தரவின் பேரில் பள்ளி செல்லா குழந்தைகள், மற்றும் பள்ளி இடை நின்ற மாணவர்களை, கண்டறிந்து அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், தலைமையில் வட்டாரவள மேற்பார்வையாளர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் சரவணன்ராஜ், மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆகியோர் குழுவாக சென்று அன்மருதை, கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள், உள்ளார்களா என்று ஆய்வு செய்தனர்.

அதுபோல இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிசெல்லா குழந்தைகள் 5 பேர். பள்ளி இடை நின்ற மாணவர்கள் 2 பேரை கண்டறிந்து. அன்மருதை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இவர்களை சேர்த்தனர்.

புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், சீருடைகள், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், வாய்ப்பாடு, ஆகியவற்றை வழங்கி, மாணவர்களிடம் கல்வியின் அவசியத்தை கூறி தொடர்ந்து பள்ளிக்கு வர மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரிபாய், பட்டதாரி ஆசிரியர்கள் பழனிவேல், வெங்கடேசன், சபிதாதேவி, ஜவகர் தேவநாயகம், வெங்கடாசலம், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News