உள்ளூர் செய்திகள்

ரூ.5 லட்சம் மதிப்பில் பள்ளி நுழைவு வாயில்

Published On 2022-09-20 09:28 GMT   |   Update On 2022-09-20 09:28 GMT
  • முன்னாள் மாணவர்கள் கட்டி கொடுத்தனர்
  • 70-க்கும் மேற்பட்டோர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்தில் உள்ள 1969-ம் ஆண்டு 1975-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சங்கமம் நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 1975ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்து சந்திப்பு நிகழச்சி நடத்தினார்கள்.

இதில் சுமார் 70-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் இதில் 1975ம் ஆண்டு தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் ஆசிரியைகள் மேடையில் அமர வைத்து கேடயம் வழங்கி சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கவுரவ படுத்தினார்கள்.

மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது சொந்த செலவில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூர் அரசு பள்ளி நுழைவுவாயில் கட்டி கொடுத்தனர்.

Tags:    

Similar News