கரும்பு டிராக்டர் கவிழ்ந்து மாணவன் காயம்
- டயர் வெடித்து விபரீதம்
- பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி மீட்டனர்
வந்தவாசி:
வந்தவாசி சுற்றி பல கிராமங்கள் இந்த கிராமங்களில் விவசாய நிலங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்புகளை வெட்டி செய்யாறு சக்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம்.
வந்தவாசி அடுத்த கண்டராயபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் நன்கு வளர்ந்துள்ள கருவுகளை வெட்டி டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வெங்கடேசன் என்பவர் ஓட்டி சென்றார்.
வெங்கடேசனின் கல்லூரி நண்பர்கள் குமார், வினோத், வேல்முருகன், ஆகியோரும் டிராக்டரில் பயணம் செய்தனர்.
எறும்பூர் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்த போது பின்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்துள்ளது. அப்போது தாறுமாறாக ஓடிய டிராக்டர் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.
டிராக்டரில் அமர்ந்திருந்த குமார் கரும்புகளுக்கிடையே மாட்டிக் சிக்கி கொண்டார்.
இது குறித்து வந்தவாசி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கரும்புகளை அகற்றி கரும்புக்கிடையே அடியில் சிக்கி கிடந்த குமாரை மீட்டனர்.
காயமடைந்த குமாரை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.மற்றவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.