உள்ளூர் செய்திகள்

கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பேசிய காட்சி.

கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

Published On 2022-12-14 09:56 GMT   |   Update On 2022-12-14 09:56 GMT
  • உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை வழங்கினர்
  • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்பென்னாத்தூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

அவைத்தலைவர் ரவி (எ) இளஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார்.

தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சி.கே.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சி.கே. அன்பு, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு, பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாளின் நூற்றாண்டு நிறைவு விழாவை கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், இளைஞர் அணி மற்றும் உறுப்பினர் சேர்க்கை சேர்ப்பது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.

மாவட்ட துணை செயலாளர் செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மு.பெ.கிரி கலந்துகொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், செயல்படுவது குறித்தும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கி பேசினார்.

முன்னதாக, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள், மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் திருவுருவப்படங்களுக்கு மாலைகள் அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி குப்புசாமி தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய துணை செயலா ளர்கள் சிவக்குமார், பரசுராமன், செல்வமணி, பொருளாளர் சுப்பராயன், மாவட்ட பிரதிநிதிகள் தேவேந்திரன், இளங்கோ, தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மகளிர்குழு அணி நித்தியா, ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கீழ்பென்னாத்தூர் ஒன்றிய துணை செயலாளர் சோமாஸ்பாடி சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News