உள்ளூர் செய்திகள்

தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தபோது எடுத்த படம்.

திசையன்விளை விவசாயிகள் போராட்ட அறிவிப்பு; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Published On 2023-09-10 09:07 GMT   |   Update On 2023-09-10 09:07 GMT
  • பேச்சுவார்த்தை திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையில் நடந்தது.
  • வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை வரும் மழைகாலத்திற்குள் முடித்து தண்ணீர் கொண்டு செல்வதை உறுதிசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

திசையன்விளை:

தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை அரசு போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி முதல் திசையன்விளையில் சுற்றுவட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதுதொடர்பாக பேச்சு வார்த்தை திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகன் தலைமையில் நடந்தது. இதில் நீர்வளத்துறை செயற்பொறி யாளர்கள் அண்ணாத்துரை, திருமலைக்குமார், பழனிவேல், உதவி செயற்பொறி யாளர் பேச்சிமுத்து ,திசையன்விளை வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜன், செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிந்திரன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், தி.மு.க. நகர செயலாளர் ஜான் கென்னடி மற்றும் விவசாயிகள் அரசு அதிகாரி கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு திட்ட வெள்ளநீர் கால்வாய் மற்றும் பல்வேறு நிலையில் உள்ள பணிகள் முன்னேற்றம் குறித்து விவசாயிகளிடம் விவாதிக்கப்பட்டது. மேலும் வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகளை வரும் மழைகாலத்திற்குள் முடித்து தண்ணீர் கொண்டு செல்வதை உறுதிசெய்யும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்றுகொண்ட விவசாயிகள் 13-ந் ேததி நடத்த இருந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

Tags:    

Similar News