உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் நாளை 247 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு

Published On 2022-07-23 10:03 GMT   |   Update On 2022-07-23 10:03 GMT
  • மொபைல் போன், எலெக்டிரானிக் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வர்கள் தேர்வுக்கு கொண்டு செல்ல அனுமதிக் கப்படமாட்டாது.
  • விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிறம் கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கோவை:

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் (குரூப்-4) தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 77,020 பேர் எழுதுகிறார்கள்.

தேர்வாளர்கள் நுழைவு சீட்டை அரசு பணியாளர் தேர்வாணைய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்தை தெரிந்துகொள்ள வேண்டும். தேர்வு மையத்துக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தேர்வை சிறப்பாக நடத்துவதற்காக 24 மொபைல் அலுவலர்கள், 247 தேர்வுக்கூட ஆய்வு அலுவலர்கள், துணை கலெக்டர் அந்தஸ்தில் 12 கண்காணிப்பு அதிகாரிகள், 17 பறக்கும் படை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிகைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது.

காலை 9 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் யாரும் தேர்வுகூடத்துக்குள் நுழைய அனுமதிக்கப் படமாட்டார்கள். காலை 8.30 மணிக்குள் தேர்வுக்கூ டத்திற்கு சென்றடைய வேண்டும். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளுக்கு தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.

விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கருப்பு நிறம் கொண்ட பந்துமுனைப் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில் மற்றும் ஏனைய நிற பேனாக்களை பயன்படுத்தக்கூடாது. விடைத்தாளில் உரிய இடங்களில் (இரு இடங்களில்) கையொப்பமிட்டு, இடதுகை பெருவிரல் ரேகையினை பதிக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும்போது விடைத்தாளில் மற்ற இடங்களில் மைபடாமலும், விடைத்தாள் எந்தவகையிலும் சேதமடை யாமலும் கவனமுடன் செயல்பட வேண்டும். வினாத்தாளில் ஏதேனும் கேள்விகளுக்கு விடை தெரியா விட்டால் ஓ.எம்.ஆர். வட்டத்தில் இ என்ற வட்டத்தை கருமை யாக்கப்பட வேண்டும்.

ஓ.எம்.ஆர். வட்டத்தில் ஏ.பி.சி.டி மற்றும் இ என்ற ஒவ்வொரு விடைக்கும் வட்டங்கள் கருமையாக்கப்பட்டுள்ளன என்று எண்ணி அந்த மொத்த எண்ணிக்கையை உரிய கட்டங்களில் நிரப்பி கருமையாக்கப்பட வேண்டும்.

தேர்வர்கள் இதனை பிழையில்லாமல் உரிய கட்டங்களில் கருமை யாக்கப்பட வேண்டும். தேர்வர்கள் இதனை சரியாக செய்துள்ளனரா? என்று உறுதி செய்து கொள்ளவேண்டும். இதற்காக ஒவ்வொரு தேர்வருக்கும் தேர்வு முடிந்த பின்னர் 15 நிமிடங்கள் கூடுதல்லாக வழங்கப்படும்.

அதாவது 12.30 மணி முதல் 12.45 மணி வரை இந்த செயல்பாட்டை முடித்து விடைத்தாளை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கவேண்டும். மொபைல் போன், எலெக்டிரானிக் கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தேர்வர்கள் தேர்வுக்கு கொண்டு செல்ல அனுமதிக் கப்படமாட்டாது. 

Tags:    

Similar News