நெல்லை மாவட்டத்தில் இன்று பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்
- ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- பாளை தாலுகா அலுவலகத்தில் சிலர் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் மனுக்கள் வழங்கினர்.
நெல்லை:
பொதுவினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த மாதமும் 2-வது சனிக்கிழமையான இன்று நடந்த குறைதீர்க்கும் முகாமில் புதிதாக குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட வற்றுக்காக ஏராளமானோர் வந்திருந்தனர்.
டவுனில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் குடும்ப அட்டையில் செல்போன் எண்ணை புதிதாக இணைக்கவும், பழைய எண்ணை மாற்றவும் பொதுமக்கள் வந்திருந்தனர். பாளை தாலுகா அலுவலகத்தில் சிலர் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் மனுக்கள் வழங்கினர்.
இதேபோல் மாவட்டத்தில் ராதாபுரம், திசையன்விளை, அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட அலுவலகங்களிலும் பொதுமக்கள் குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து சென்றனர்.