கடலூரில் இன்று நடந்தது: பாய், தலையணை, போர்வையுடன் நூதன போராட்டம்
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
- தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் .
கடலூர்:
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்காக சிஐடியு சார்பில் நடைபெற்ற இயக்கத்தில் டியூட்டி ஆப் மற்றும் விடுப்பு கொடுத்துவிட்டு கலந்துகொண்ட தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போட்டதற்கு நீதி கேட்டு பாய், தலையணை மற்றும் போர்வையுடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு. சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை கடலூர் போக்குவரத்து அலுவலக பொது மேலாளர் அலுவலகம் முன்பு சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் மண்டல தலைவர் மணிகண்டன் துணை பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கண்ணன் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், நடராஜன் மற்றும் நிர்வாகிகள் கையில் பாய் தலையணை மற்றும் போர்வைகளை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர் . இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டு வந்தது