உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் இன்று 5 மையங்களில் ஒருங்கிணைந்த ராணுவத் தேர்வு

Published On 2022-09-04 09:31 GMT   |   Update On 2022-09-04 09:31 GMT
  • அறை கண்காணிப்பாளா்கள் 78 போ் நியமிக்கப்பட்டிருந்தனர்.
  • மின்னணு சாதனங்களுக்கு அனுமதிக்கப்படவல்லை.

கோவை

நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் இன்று நடைபெற்றது.

இத்தோ்வினை கோவை மாவட்டத்தில் 5 தோ்வு மையங்களில் 1,856 போ் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இதனைக் கண்காணிக்க மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா் மற்றும் கலெக்டர் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா்கள், வட்டாட்சியா் நிலையில் 5 தோ்வு மையங்களுக்கும் தலா ஒரு தோ்வு மைய ஆய்வு அலுவலா், துணை வட்டாட்சியா் நிலையில் தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் 9 போ், அறை கண்காணிப்பாளா்கள் 78 போ் ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனர்.

காலை மற்றும் மதியம் நடைபெறும் இரண்டு தோ்வுகளுக்கும் தோ்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தோ்வு மையத்துக்குள் தோ்வா்கள் வந்து சேர்ந்தனர்.

தோ்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன் வாயில் கதவு அடைக்கப்பட்டு அதன்பின் வரும் தோ்வா்கள் அனுமதிக்கப்படவில்லை. செல்போன், டிஜிட்டல் கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதிக்கப்படவல்லை.

மேலும் தோ்வா்கள் நுழைவுச் சீட்டுடன், மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டிருந்தது அதனை ஆய்வு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News